உள்நாடு

உணவு பொருட்களின் விலை நாளை குறைக்கப்படும்

(UTV | கொழும்பு) – உணவு பொருட்களின் விலை நாளை குறைக்கப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்; சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, மரக்கறிகள் மற்றும் பிற பொருட்களின் விலை குறைப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விலையில் கடந்த வாரம் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தனது விலையில் திருத்தம் செய்யப்பட இருந்த போதிலும், இன்று விலை குறைப்பை அறிவிக்கத் தவறியதால், நாளை அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் தாம் குறைக்கவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

சமையல் எரிவாயுவின் விலை 200 ரூபாவிற்கும் அதிகமாக குறைக்கப்படும் என நம்புவதாக அசேல சம்பத் தெரிவித்தார்.

பல்வேறு பிரச்சினைகள் இருந்தபோதிலும், உணவக உரிமையாளர்கள் அரிசி பொதி மற்றும் சாதாரண தேநீர் ஆகியவற்றின் விலைகளை குறைக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

அரிசிப் பொதிகள், கொத்து மற்றும் ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளை ஒழுங்குபடுத்துமாறு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு விலை நிலையாக இருக்க வேண்டும் என்றார்.

பண்டங்களின் விலை அதிகரிப்பு மற்றும் கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிற்றுண்டிச்சாலை தொழிற்துறைக்கு அரசாங்கம் சலுகைகளை வழங்குமாறும் அசேல சம்பத் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

பாராளுமன்றத் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய காலி மாவட்ட சுயேட்சை குழு

editor

கிஹான் பிலபிட்டியவிற்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை உத்தரவு

திருமணத்தில் நடனமாடிய  யுவதி மரணம்