(UTV | கொழும்பு) – தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆகஸ்ட் 11ம் திகதி நேரடியாக சந்தித்து மலையக தமிழ் இலங்கையர்களின் அபிலாசைகள் தொடர்பில் குறிப்பாகவும், தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவாகவும் கலந்துரையாடும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.
“பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான தேசிய சர்வகட்சி வேலைத்திட்டம் ஒன்றினை செயல்படுத்துதல்” தொடர்பில், ஜனாதிபதி தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு விடுத்துள்ள அழைப்பின் பேரிலேயே இந்த சந்திப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
அதேவேளை, நாளை ஆகஸ்ட் 5ம் திகதி ஐக்கிய மக்கள் கூட்டணியின் தூதுக்குழுவிலும் இடம்பெற்று பொதுவான தேசிய பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடுவோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.