(UTV | கொழும்பு) – கிளைபோசேட் தடையை நீக்குவது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற விவசாயம், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி எதிர்வரும் காலங்களில் இலங்கையில் விரிவான விவசாய பயிர்ச்செய்கை வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை விவசாய அமைச்சு மேற்கொண்டுள்ளது.
பயிர்ச்செய்கையின் மூலம் முறையான அறுவடையைப் பெறுவதற்கு, களைகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களுக்கான தடை நீக்கப்பட வேண்டுமென ஒவ்வொரு தரப்பினரும் அபிப்பிராயப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.