உள்நாடு

அனைத்து உப தபால் நிலையங்களும் இன்று மூடப்படும்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உப தபால் அலுவலகங்களையும் இன்று (28) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை தபால் அலுவலகங்கள் திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

தபால் அலுவலகங்கள் திங்கட்கிழமை மூடப்பட்டு செவ்வாய் முதல் சனிக்கிழமை வரை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறந்திருக்கும் என தபால் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பாடசாலைகளுக்குச் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயம்!

நுகர்வோருக்கு நிவாரணம் – ஜனாதிபதி பணிப்பு

அஜித் டோவால் இலங்கை வந்தடைந்தார்