உள்நாடு

‘சீனாவுடன் கடன் மறுசீரமைப்பிற்கு இலங்கை உடனடியாக செல்ல வேண்டும்’

(UTV | கொழும்பு) – சீனாவுடன் கடன் மறுசீரமைப்பிற்கு இலங்கை உடனடியாக செல்ல வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

அதன் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீ நிவாசன், சீனா இலங்கையின் பெரும் கடனாளி என்றும், இலங்கை தனது கடனை மறுசீரமைக்க சீனாவுடன் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுடன் தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 4.5 பில்லியன் டொலர் நிதிக் கடனை இலங்கை எதிர்பார்க்கும் நிலையிலேயே இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி, அபிவிருத்தி வங்கிக் கடன்கள் மற்றும் மத்திய வங்கி இடமாற்றங்கள் உட்பட நிதி வசதிகளுக்காக 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை சீனாவிடமிருந்து பெற்றுள்ளது.

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளில், அதிக முதலீடு செய்த நாடும் சீனாவாகும்.

Related posts

துப்பாக்கிச்சூட்டுக்கு முப்படையினருக்கும் உத்தரவு

கொவிட் தொற்றினால் மேலும் 2 பேர் மரணம்

பொது மன்னிப்பு கைதிகளின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிப்பு