கேளிக்கை

நிர்வாண புகைப்படம் வெளியிட்ட ரன்வீர் சிங் மீது பொலிசில் முறைப்பாடு

(UTV |  இந்தியா) – பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனின் கணவர். ரன்வீர் சிங்கின் ஆடை ஸ்டைலும் தோற்றமும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். சமீபத்தில், ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர் பத்திரிகை ஒன்றுக்காக போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்திருந்தார். அதில் தனது உடம்பில் ஒட்டு துணியும் இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து, அதனை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இதனால் ரன்வீர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகினார்.

இவருக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பியது. இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த ரன்வீர் சிங், எல்லோர் முன்னிலையிலும் நிர்வாணப் படங்களுக்கு போஸ் கொடுப்பது எனக்கு ஒன்றும் கடினம் அல்ல. இந்த புகைப்படங்களில் எனது ஆன்மாவை பார்க்க முடியும்.

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னால் கூட நிர்வாணமாக இருக்க முடியும். ஆனால், சங்கடப்பட்டால் எதுவும் செய்ய முடியாது என்றார். இந்த நிலையில், ரன்வீர் சிங் தனது நிர்வாண புகைப்படங்களை, இணையத்தில் பதிவிட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொலிசிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை தொடர்ந்து, நடிகர் ரன்வீர் சிங் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.

Related posts

திருமண நிச்சயதார்த்திற்கு வந்தவர்களுக்கு ரஜினி கொடுத்த பரிசு!

மீண்டும் தள்ளிப்போகும் ரஜினியின் 2.0

ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமார்?