வகைப்படுத்தப்படாத

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை சீனா பயணமானார்

(UDHAYAM, COLOMBO) – உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை சீனா பயணமானார்.

பீஜிங்கில் இடம்பெறும் மாநாடொன்றில் பங்கேற்பதற்காக அவர் சீனா செல்கிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சீன ஜனாதிபதி ஸீ ஜின் பிங்கின்  எண்ணக்கருவின் அடிப்படையில் ‘ஒரே பிராந்தியம் ஒரே பாதை’ என்ற  தொனிப்பொருளில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

இதில் 30 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

Water cut for several areas on Friday

UN Special Rapporteur to arrive in SL today

இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடிதம்