உள்நாடு

ரணிலின் வீட்டிற்கு தீ வைத்த அமைச்சரின் மகனை கைது செய்ய சிவப்பு நோட்டீஸ்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு கடந்த 9ம் திகதி சேதம் விளைவித்த முன்னாள் பிரதி அமைச்சரின் மகனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான ஆவணங்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் தற்போது சர்வதேச பொலிஸாருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதுவும் அவருக்கு எதிராக நீதிமன்றத்தால் பெறப்பட்ட சிவப்பு நோட்டீஸ் உத்தரவு.

இந்த பிரதி அமைச்சரின் மகன் கடந்த 10ம் திகதி இரவு டுபாய் சென்றுவிட்டு அங்கிருந்து இங்கிலாந்து சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த சந்தேக நபர் கம்பஹா ஐக்கிய மக்கள் சக்தியின் ஆசன அமைப்பாளராக கடமையாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்கவின் வீடு முற்றுகையிடப்பட்டதுடன், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதம் கிடைக்கும் வரை வீட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என அவர் காணொளி மூலம் அறிவித்திருந்தார்.

வீட்டை எரிக்க உதவிய பெண் ஒருவருக்கு எதிராகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவங்கள் தொடர்பான அனைத்து காணொளிகள் மற்றும் புகைப்படங்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைப்பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்

ஈஸ்டர் தாக்குதலின் போது தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களின் தடைகள் நீக்கம்?

சிலிண்டரின் தேசியப் பட்டியலில் ரவி கருணாநாயக்க

editor