(UTV | கொழும்பு) – நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் 14 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
14 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் சிங்களவர் என்றும் எஞ்சிய 08 பேர் தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்றைய ஜனாதிபதி வாக்கெடுப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, தற்போது நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய ஒரே திறமையான நபர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே என தெரிவித்தார்.
புதிய ஜனாதிபதி கோரிய பல்வேறு நெருக்கடிகளை தீர்க்க பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டால் அது நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.