உள்நாடு

‘நாடாளுமன்றத்திற்கு தீ வைக்கப்பட்டால், காலி முகத்திட போராட்டக்காரர்களை குறை கூறாதீர்கள்’

(UTV | கொழும்பு) – நாடாளுமன்றத்திற்கு தீ வைக்கப்பட்டால் அதற்கு காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களை குற்றம் சுமத்தக்கூடாது என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகே, நேற்று ஜூலை 20 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்த தொடர் முன்மொழிவுகள் நிராகரிக்கப்பட்டால், அடுத்த இரண்டு மூன்று வாரங்களுக்குள் அதற்கான பதில் கிடைக்கும் என முதலிகே தெரிவித்தார்.

பொதுமக்களின் கருத்தை கருத்திற்கொள்ளாது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாடாளுமன்றம் அதிகாரம் வழங்கியதாக முதலிகே குற்றம் சாட்டியிருந்தார்.

“கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இருவரையும் பதவியில் இருந்து நீக்க மக்கள் அதிகாரம் எவ்வாறு செயற்பட்டதோ அவ்வாறே அதே சக்தி ரணில் விக்கிரமசிங்கவையும் வெளியேறுவதை உறுதி செய்யும்” என வசந்த முதலிகே தெரிவித்திருந்தார்.

Related posts

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் புதிய அமைச்சு

“அரசு தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சிகளை தோற்கடிப்போம்..”

“ஒரு நாடு, ஒரே சட்டம்” – ஜனாதிபதியிடம்