உள்நாடு

“ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற நடைமுறையில் தலையிட வேண்டாம்”

(UTV | கொழும்பு) – தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கு தடையாக எதனையும் செய்ய வேண்டாம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றது.

எந்தவொரு தனிநபரின் அல்லது அரசியல் கட்சியின் தனிப்பட்ட அரசியல் நலன்களை கருத்திற் கொள்ளாமல் நாட்டின் நன்மையை கருத்திற் கொண்டு தீர்மானங்களை எடுப்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் அவசர தேவை எனவும் குறித்த சங்கம் தெரிவிக்கிறது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண்பதே நம்பிக்கை எனவும் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும், மக்கள் இறைமைக்கும் அவர்களின் அபிலாஷைகளுக்கும் மதிப்பளித்து ஜனநாயக விழுமியங்களை பாதுகாத்து உறுப்பினர்கள் இந்த பாரிய கடமையை நிறைவேற்ற வேண்டும் எனவும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாடு குழப்பமடைவதைத் தடுப்பதற்கும், சமூக அரசியல், பொருளாதாரம் மற்றும் ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகல வழிகளிலும் உழைக்க வேண்டும் என்றும் சங்கம் குறிப்பிடுகிறது.

ஜனாதிபதியை இராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தி செயற்பாட்டாளர்கள் ஆக்கிரமித்துள்ள அரசாங்க இடங்களை கையளித்ததை தொழிற்சங்கம் பாராட்டுவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 500 இற்கும் மேற்பட்டோர்

எரிவாயு விலை சகல விற்பனை நிலையங்களிலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும்

பிரதேச செயலக ஊழியர்கள் இருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது