(UTV | கொழும்பு) – ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானத்தை நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கை தொடர முடியாது என சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட ஆரம்ப ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி சுமித் பெரேரா இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.