உள்நாடு

‘கோட்டாபயவுக்கு இலங்கையிலிருந்து செல்ல இந்தியா உதவவில்லை’

(UTV | கொழும்பு) –   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் வருகைக்கு இந்தியா உதவியது என்ற ஆதாரமற்ற செய்திகளை வன்மையாக நிராகரிப்பதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பதிவில், இலங்கை மக்கள் ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் ஊடாக செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான அவர்களின் அபிலாஷைகளை அடைய முயற்சிக்கும் போது அவர்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று வலியுறுத்தியுள்ளது.

Related posts

“மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்” – முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத்திட்டத்துக்கு அவுஸ்திரேலியா பாராட்டு

editor

சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது