(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவரால் வெளியிடப்படும் என ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சபாநாயகரால் வெளியிடப்படும் அறிவிப்புகள் மாத்திரமே ஜனாதிபதியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளாக கருதப்பட வேண்டும் எனவும் அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.