(UTV | கொழும்பு) – சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்காக அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (11) காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.