(UTV | கொழும்பு) – கொழும்பின் பல பகுதிகளில் நீர் குழாய் சீர்திருத்தப் பணிகள் காரணமாக இன்று (07) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
கொழும்பு 1 பகுதிக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என்றும், நாளை (08) காலை 6.00 மணிக்கு நீர் விநியோகம் வழமைக்கு வருவதாகவும் குறித்த சபை மேலும் தெரிவித்துள்ளது.