உள்நாடு

ரஷ்யா ஜனாதிபதியிடம் இருந்து கிடைத்த பதில் கடிதம் குறித்து மைத்திரி கருத்து

(UTV | கொழும்பு) – ரஷ்ய அரசாங்கம் தமக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் என்ன செய்ய முடியும், வருந்தத்தக்கது என முன்னாள் ஜனாதிபதி பொலன்னறுவை மாவட்ட சபை உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன இன்று (4) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ரஷ்ய விமானம் தொடர்பான நெருக்கடியின் பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு தாம் அனுப்பிய கடிதத்திற்கு பதில் கிடைத்துள்ளதாக தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை ரஷ்யா செய்தால், விமான சேவைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க முடியும் என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

விமானம் தொடர்பான பிரச்சினையை இலங்கை கையாண்ட விதம் தவறானது எனவும், நீதிமன்றத்திற்கு செல்லாமல் இராஜதந்திர ரீதியில் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும் எனவும் ரஷ்யாவில் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்பதற்கு தெளிவான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் உரம், எரிபொருளை பெற ரஷ்ய அரசுடன் பேச தேவையில்லை என்றும் ரஷ்யாவில் உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட இலங்கையில் உள்ள நிறுவனங்களுக்கு அந்த ஒப்பந்தத்தின் மூலம் அந்த கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியும் எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, தாம் ரஷ்யாவிற்கு விஜயம் செய்வது எண்ணெய் கொண்டு வருவதோடு மட்டுமன்றி நல்லெண்ணத்தை வளர்த்துக்கொள்ளவும் வருவதாக தெரிவித்த அமைச்சர், ரஷ்ய அரசாங்கத்திற்கு இது தொடர்பான கடிதங்களை ரஷ்ய மொழியில் மொழிபெயர்ப்பதாக தெரிவித்தார்.

Related posts

“ஸ்ரீலங்கன் டொப் 100 விருது” பெற்றார் அஹ்மத் ஸாதிக்!

கொவிட் 19 தடுப்பூசியின் நான்காவது டோஸ் செலுத்தும் பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் – சென்னை நேரடி விமான சேவைகள் மீளவும் ஆரம்பம்