உள்நாடு

‘ஜனாதிபதி ஒருவர் நாட்டில் உள்ளாரா, கண்ணுக்கு தெரிவதில்லையே..’

(UTV | கொழும்பு) –  எரிமலையில் டென்னிஸ் பந்துகளை அடிக்காமல் நாட்டு மக்களின் மற்றும் சர்வதேசத்தின் நம்பிக்கையை அறியும் வேலைத்திட்டத்திற்கு செல்வோம் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் ஜனாதிபதி இருக்கின்றார் ஆனால் அவர் கண்ணுக்கு தெரிவதில்லை என தெரிவித்த விமல் வீரவன்ச, மக்களின் துன்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் தூரத்தில் இல்லை எனவும் தெரிவித்தார்.

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள வேளையில் பிரச்சினைகளை தீர்க்கும் வழிமுறைகள் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் நிலைமையை விளக்குவதற்கும் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ பாராளுமன்றத்தில் இல்லை என என விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், நாட்டின் ஆட்சி மீது சர்வதேச சமூகத்தில் நம்பிக்கை இல்லை.

இதேவேளை, நெருக்கடி நிலை மேலும் அதிகரிக்க இடமளிக்காமல் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும் என விமல் வீரவன்ச தெரிவித்தார்.

Related posts

டெங்கு நோய் பரவுக்கூடும் அபாயம்

கடவுச்சீட்டுக்காக இன்றும் நீண்ட வரிசை – எதிர்காலத்தில் டோக்கன்கள் இணையத்தளத்தில்

editor

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 687 பேர் கைது