கிசு கிசு

எண்ணெய் இருப்புக்கள் தீர்ந்துவிட்டன… 

(UTV | கொழும்பு) – இலங்கையில் தற்போது ஒரு நாளுக்கு போதுமான எரிபொருள் இருப்பு இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது 1100 தொன் பெட்ரோல் மற்றும் 7500 டன் டீசல் மட்டுமே உள்ளது.

இலங்கை கடனை செலுத்த தவறியதன் காரணமாக சர்வதேச நிறுவனங்கள் இலங்கையை மோசமாக ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இலங்கைக்கு எரிபொருளை வழங்க சர்வதேச வங்கியிடம் உத்தரவாதம் கோருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக நாட்டிற்கு எரிபொருள் தாங்கி எதுவும் வரவில்லை எனவும், விரைவில் எரிபொருள் தாங்கி வரவில்லையென்றால், பொது போக்குவரத்து கூட தடைப்பட்டு நாடு முற்றாக செயலிழந்துவிடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சிறிய அளவிலான எரிபொருட்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதால் பொதுமக்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான டோக்கன் முறை பயனற்றதாக இருக்கும் என்றும் மின் உற்பத்தி நிலையங்கள் தேவையான இருப்புகளை வழங்க முடியாததால் மின்வெட்டு மேலும் நீடிக்கும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

மஹிந்தவின் வீட்டை கோரும் கோட்டா

குரலற்றவர்களின் குரலாக ‘சிமோன் பைல்ஸ்’ [முழுமையான கதை]

ஸ்ரீலங்கன் விமான சேவை இடைநிறுத்தம் : நியாயமற்ற நடவடிக்கை