உள்நாடு

எரிபொருள் நிலையங்களில் நடக்கும் மோதல்களை வீடியோ பதிவு செய்ய பொலிசாருக்கு பணிப்பு

(UTV | கொழும்பு) – எரிபொருள் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கு அங்கு இடம்பெறும் மோதல்களை வீடியோ பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற மோதல்கள் கட்டுப்படுத்த முடியாத நிலையில், உயர் பொலிஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கூடுதல் அதிகாரிகளின் உதவியை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த காட்சிகளை பயன்படுத்தி குற்றவாளிகளை இனங்கண்டு எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இலங்கைக்கான நேரடி விமான சேவையில் சர்வதேச விமான நிறுவனங்கள்

ஜொனி கைதாகும் சாத்தியம்

இதுவரை கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரம்