உள்நாடு

இனி வீட்டிலேயே பிரவசம்

(UTV | கொழும்பு) – கர்ப்பிணித் தாய்மார்களை வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாத நிலையில் வீட்டிலேயே பிரசவம் செய்ய குடும்ப சுகாதாரப் பணியாளர்கள் தயாராக இருப்பதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் பாரிய எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக கிராமப்புறங்களில் இன்னும் சில போக்குவரத்துச் சிரமங்கள் இருப்பதாகவும், பிரசவத்தை எதிர்நோக்கும் தாய்க்கு வீட்டிலோ, வயல்வெளியிலோ, எந்த நேரத்திலும் வசதி செய்து தர குடும்ப நலப் பணியாளர்கள் தயாராகி வருவதாகத் தெரிவித்தார்.

மருத்துவமனைகள் மற்றும் எங்கும் பிரவசம் செய்வதற்கான அனுமதி மற்றும் அதிகாரத்தை இலங்கை மருத்துவ சபை வழங்கியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கொடித்துவக்கு மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 801 ஆக அதிகரிப்பு

புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கும்

ஐ.தே.க தலைமைத்துவம்; இறுதி தீர்மானம் வியாழக்கிழமை