உள்நாடு

பிரதமரின் அழைப்பினை ஏற்று ஹர்ஷா – எரான் பிரதமர் அலுவலகத்திற்கு

(UTV | கொழும்பு) –  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்கிரமரத்ன ஆகியோர் பிரதமர் அலுவலகத்திற்கு விஜயம் செய்து நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடினர்.

இதில் அரசாங்க அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளதுடன் நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் நிதியமைச்சின் செயலாளர் நீண்ட விளக்கமொன்றை வழங்கியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, ​​பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு பல நாணயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் ஆதரவை பிரதமர் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக திரு.ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் கிராமம் ஒன்று சீல் வைக்கப்பட்டது

முதலீட்டு ஊக்குவிக்க கோட்டா-மஹிந்த-பசில் தலைமையில் குழு

குழந்தையை ரயில் கழிவறையில் விட்டுச்சென்ற தம்பதியினரிடமே குழந்தையை ஒப்படைக்கப்பட்டுள்ளது