விளையாட்டு

குசல் பெரேராவின் அறுவை சிகிச்சை தாமதம் குறித்து சனத் கேள்வி

(UTV | கொழும்பு) –   குசல் ஜனித் பெரேராவுக்கு மேற்கொள்ளப்படவுள்ள சத்திரசிகிச்சையை அதிகாரிகள் ஏன் தொடர்ந்தும் ஒத்திவைக்கிறார்கள் என முன்னாள் அணித்தலைவர் சனத் ஜயசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் வீரர் ரசல் அர்னால்டுடன் பேச்சுப் பிரிவில் கலந்து கொண்ட ஜயசூர்யா, குசலின் அறுவை சிகிச்சை கடந்த ஆறு மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

பல பெறுமதிமிக்க வீரர்கள் தற்போது காயம் பட்டியலில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த காயத்தின் விபரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் இசுரு உதான கூறுகையில், குசல் பெரேரா தோள்பட்டை காயத்துடன் தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் மூலம் விளையாடினார்.

மற்ற சிகிச்சைகள் நீண்ட காலத்திற்கு ஏற்றதாக இல்லாததால், ஒரு அறுவை சிகிச்சை தேவை என்று அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

லங்கா பிரிமியர் லீக் போட்டி 2020 – ஆகஸ்ட் முதல்

பாகிஸ்தானிடம் வீழ்ந்தது ஆப்கானிஸ்தான்

மஹேல ஜயவர்தனவிடம் இன்று விசாரணை நடத்தப்படாது