உள்நாடு

தரம் ஒன்று பாடசாலை மாணவர் சேர்க்கை தொடர்பான சுற்றறிக்கையில் திருத்தம்

(UTV | கொழும்பு) – பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கையை 2023 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதிபர்கள், சுற்றறிக்கை திருத்தக் குழு, அமைச்சின் புலனாய்வுப் பிரிவு, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சமர்ப்பித்துள்ள உண்மைகளை கருத்திற்கொண்டு நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலும் திருத்தப்பட்ட சுற்றறிக்கை வகுக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பில் spa க்களை சுற்றி வளைத்து அதிரடி வேட்டையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

முன்னாள் நீதவான் திலின கமகே விடுதலை

பதில் நிதிமையச்சராக ஜனாதிபதி