உள்நாடு

சீன தூதுவர் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்தார்

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இலங்கைக்கான சீன தூதுவர் சி ஷென்ஹோங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பொலன்னறுவையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்று (10) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள தெற்காசியாவிலேயே மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலையை சீனா நன்கொடையாக வழங்கியமைக்கு மைத்திரிபால சிறிசேன இதன்போது நன்றி தெரிவித்தார்.

தூதுவரின் இல்லத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி பொலன்னறுவை மாவட்டத்தின் வரலாற்றுப் பெறுமதி மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன;

“இலங்கையின் பொருளாதாரம் தொடர்பான சீனாவின் கருத்துக்கள் குறித்து இந்த சந்திப்பில் விளக்கப்பட்டது. சீனத் தூதுவர் இலங்கைக்கு இயன்ற உதவிகளை செய்வதாக தெரிவித்தார்.”

“சர்வ கட்சி ஆட்சி அமைக்க வேண்டுமென்று நாங்கள் மூன்று மாதங்களாக கூறி வருகிறோம். குறுகிய காலத்திற்கு சுமார் 15 பேர் கொண்ட அமைச்சரவை… அப்போது உலகின் பல நாடுகள் உதவும்.”

குறிப்பாக இந்த அரசாங்கம் மாறி இன்னொரு அரசாங்கம் வரும் வரை இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது. இந்த நாட்டை கட்டியெழுப்ப சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதே ஒரே வழி.

“நாங்கள் இப்போது எதிர்க்கட்சியில் இருக்கிறோம், எல்லாவற்றிலும் நாங்கள் அரசாங்கத்தை ஆதரிக்க மாட்டோம், நான் மின்சார மசோதாவுக்கு கூட வாக்களிக்கவில்லை.”

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 770 : 01 [COVID UPDATE]

அநுரகுமார தாக்கல் செய்துள்ள மனு 20 ஆம் திகதி பரிசீலனைக்கு

கலைஞர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தை குறைக்க தீர்மானம்