உள்நாடு

‘மத்திய வங்கியின் தீர்மானங்களில் தலையிடப் போவதில்லை’

(UTV | கொழும்பு) – மத்திய வங்கியின் தீர்மானங்களில் தலையிடப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பணவியல் கொள்கையில் சுயாதீனமான முடிவுகளை எடுக்க மத்திய வங்கிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இத்தருணத்தில் முடிவுகளை எடுப்பதற்கு மத்திய வங்கிக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும், அதனால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

நேற்று (04) பிற்பகல் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், மத்திய வங்கியினால் இதுவரை எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சில தரப்பினரால் வரவேற்கப்பட்டும், சில தரப்பினரால் விரும்பப்படாதும் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

வங்கி கொடுக்கல் வாங்கல்களில் மாத்திரமே பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற மத்திய வங்கியின் விதிமுறைகளுக்கு சில இறக்குமதியாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி வெளிநாட்டு கையிருப்பை அதிகரிப்பதே மத்திய வங்கியின் நோக்கமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Related posts

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அதிரடி முடிவு!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலாவது கடற்படை வீரர் குணமடைந்தார்

கிறிஸ்தவ தேவாலயங்களை திறக்க கோரிக்கை