உள்நாடு

அத்தியாவசிய மருந்துகளுக்கு ரூ.1.8 பில்லியனை வழங்க ஜனாதிபதி பணிப்பு

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொவிட் நிதியத்திற்கு 1.8 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

கொவிட் நிர்வாகம் நன்கொடையாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்றது. கொவிட் தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளதால், சுகாதாரத் தேவைகளுக்காக இந்தப் பணத்தைப் பயன்படுத்த முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

மருத்துவமனைகளுக்குத் தேவையான 234 வகையான மருந்துகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. உலக சந்தையில் மருந்துகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு, உள்ளூர் மருந்துத் தொழிற்துறையை துரிதமாக அதிகரிப்பதற்கும் தேவையான மூலப்பொருட்களை இந்தியக் கடன் உதவியின் கீழ் பெற்றுக்கொள்வதற்குமான சாத்தியக்கூறுகளை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (03) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

ஹொரணையில் உள்ள ஓயாமடுவ மற்றும் மில்லேவ பிரதேசங்களை மையமாகக் கொண்டு மருந்துத் துறையில் 12 முதலீட்டாளர்கள் உள்ளனர். அடுத்த சில மாதங்களில் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த பிராந்தியங்களில் 200 க்கும் மேற்பட்ட மருந்து வகைகளை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமுர்த்தி மற்றும் கல்வி அமைச்சு ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் போஷாக்கான உணவை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் இறக்குமதிக்கு பல ஆதாரங்களில் இருந்து நிதி வழங்கப்படுகிறது. உத்தேச பட்ஜெட்டில் இருந்தும் தேவையான நிதியை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய முன்னேற்றத்தின் அடிப்படையில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் சுகாதாரத் துறையின் பணிகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 665 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்!

தங்கம் மற்றும் நாணய விலை குறித்த தகவல்

மதுபான சாலைகளுக்கு பூட்டு!