உள்நாடு

பசிலின் மல்வானை மாளிகை வழக்கிலிருந்து பசில் விடுதலை

(UTV | கொழும்பு) – மல்வானை சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திரு நடேசன் ஆகியோர் கம்பஹா மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தொம்பே, மல்வானையில் காணி ஒன்றை கொள்வனவு செய்து ஆடம்பர வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கின் முதலாம் பிரதிவாதியான பசில் ராஜபக்ஷ, 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்வதற்கும், ஆடம்பர வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்கும் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமைக்காக சட்டமா அதிபரால் மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எசல பெரஹராவை முன்னிட்டு – விசேட ரயில் சேவைகள்.

ஜனாதிபதி மற்றும் பங்களாதேஷ் பிரதமருக்கிடையிலான சந்திப்பு!

நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு