உள்நாடு

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம்

(UTV | கொழும்பு) – பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக கடமையாற்றிய ஜெனரல் சவேந்திர சில்வா நாளை (01) முதல் புதிய பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (31) காலை கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் இந்த கடிதம் கையளிக்கப்பட்டது.

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியுமான சவேந்திர சில்வா இன்று (31) இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

முகக்கவசம் அணியாக பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

சிறுநீரக கடத்தலில் ஈடுபட்டவர் கைது

கோட்டாபயவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி