(UTV | கொழும்பு) – மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதே தனது அரசியல் வாழ்க்கையில் மிகவும் கடினமான தீர்மானம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆளும் கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக தான் அந்த கடினமான தீர்மானத்தை எடுத்ததாகவும், நாட்டின் எதிர்காலத்திற்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசியலமைப்பின் 21வது திருத்தம் தனது விருப்பத்திற்கேற்ப பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வைத்து பிரதமராக பதவியேற்றதாகவும் அந்த நம்பிக்கையில் பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களும் தமக்கு ஆதரவளிப்பார்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.