உள்நாடு

முன்னாள் பிரதமர் உள்ளிட்ட நால்வருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சர்கள் பலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் புதன்கிழமை பிரதமர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐஜிபி சி.டி. விக்கிரமரத்னவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வியாழன் அன்று ஆணைக்குழு அவரிடம் வாக்குமூலம் பெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 9 ஆம் திகதி அலரிமாளிகைக்கு முன்பாக #மைனாகோகம மற்றும் காலி முகத்திடல் #கோட்டாகோகம வில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே இக்குழுவினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினரிடம் இருந்து இவ்வாறான வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியும் கடந்த (மே 29) மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 9ஆம் திகதி அலரிமாளிகையில் நடைபெற்ற அரசியல் சந்திப்பில் வட்டரெக்க சிறைச்சாலையின் கைதிகள் குழுவொன்று பங்கேற்றதாக ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இதற்கு முன்னர் முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் அமைச்சர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பெற்றிருந்தனர்.

  • ஆர்.ரிஷ்மா

Related posts

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் m.p விஜயம்

மர்மமான ‘தலையும்’ அநாதையான ‘முண்டமும்’ [VIDEO]

அரச நிறுவனங்களை அரசாங்க கட்டிடத்திற்கு மாற்ற நடவடிக்கை