(UTV | கொழும்பு) – புதிய பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் இலங்கைக்கு தெளிவான புரிதல் கிடைத்தவுடன் அதற்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர், இந்தியாவின் NDTV-க்கு வழங்கிய நேர்காணலில், இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் பொருளாதாரத் தளம் அமைக்கப்பட வேண்டும்.
இலங்கையின் பொருளாதாரம் தவறான நிர்வாகத்தின் விளைவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையைக் கண்டு மனம் உடைந்துள்ளதாக கிரிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவதற்கு எப்போதும் தயாராக இருப்பதாகவும், தொழில்நுட்பக் குழுவொன்று இலங்கையில் ஏற்கனவே செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜீவா, இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவை தாம் மதிப்பதாகவும், கடினமான காலங்களில் இந்தியாவின் ஆதரவானது இலங்கையின் நல்ல நண்பன் என்பதை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.