உள்நாடு

மின்சாரத்தை இறக்குமதி செய்வதற்கான முன்மொழிவு

(UTV | கொழும்பு) – இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மின்சாரப் பரிமாற்றத்தை ஒருங்கிணைப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (மே 24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“கடலுக்கு அடியில் கேபிள் அமைப்பை இணைப்பது ஒரு விலையுயர்ந்த பிரச்சினையாக இருந்தது. இப்போது மேல்நிலை கேபிள் மற்றும் தூரத்தை குறைத்து அத்தகைய இணைப்பை வழங்குவதற்கான முன்மொழிவு உள்ளது. இது விவாதத்திற்குரிய விஷயம் மட்டுமே.”

இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்குவது தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவை செலவினங்களைக் குறைத்து மக்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்கும் மிகவும் திறமையான நிறுவனங்களாக மாற்ற நாங்கள் முயற்சி செய்கிறோம்.”

Related posts

போக்குவரத்து துறையில் பாரிய மாற்றத்தை மேற்கொள்ளும் ரணில் : இனி மின்சார பேருந்துகளுடன், E- ticketing வசதி

இன்று ஆரம்பமாகிறது எசல பெரஹரா!

”எங்களை கைது செய்ய எத்தனிப்பது நடக்காது” அரசியல்வாதியை எச்சரித்த சபீஸ்