(UTV | டோக்கியோ) – ஜப்பான் டோக்கியோ நகரில் நடைபெறும் குவாட் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பான் சென்றுள்ளார்.
அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், சீனா அரசு குறித்து குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளார்.
ஜோ பைடன் உரையாற்றுகையில்;
“.. உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் சுதந்திரத்திற்கு எதிராக செயல்படும் ரஷியாவின் படையெடுப்பை முறியடிக்க உக்ரைனுக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
இதேபோல தற்போது சீனாவும், ‘ஒருங்கிணைந்த சீனா’ என்ற கொள்கையின் அடிப்படையில் அதன் அண்டை நாடான தைவான் மீது படையெடுக்க திட்டமிட்டுள்ளது.
அவ்வாறு சீனா செய்தால், அது ஆபத்துடன் விளையாடுவதற்கு சமம். தைவான் மீது சீனா படையெடுத்தால், அந்நாட்டை பாதுகாக்க அமெரிக்கா களத்தில் இறங்கும். தைவானுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவங்கள் போராடும்…” இவ்வாறு ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.