உள்நாடு

இலங்கையில் குரங்கு காய்ச்சலை அடையாளம் காண வசதிகள் உள்ளதா? – டாக்டர் சந்திமா ஜீவந்தர

(UTV | கொழும்பு) –   ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவகத்தின் ஆய்வகங்களில் குரங்கு காய்ச்சலை (Monkeypox) கண்டறிவதற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளும் இருப்பதாக டாக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

மேலும், குரங்கு காய்ச்சலுக்கு தடுப்பு மருந்துகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய தரவுகளின்படி, இது சின்னம்மை நோய்க்கான தடுப்பூசி செலுத்திய 45 வயதுக்கு மேற்பட்டோரினை பெரிதாக தாக்காது. இது காற்றில் பரவும் சுவாச வைரஸாக அதிகளவு தாக்கம் செலுத்தாது. எவருக்கும் தொற்றக்கூடியது என அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு தேவையான இரசாயன திரவங்கள் குறித்து முன்னரே ஏற்பாடு செய்துள்ளதாகவும், அடுத்த வாரம் அது இலங்கை வந்தடையும் என்றும் அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இதுவரை, குறைந்தது 12 நாடுகளில் 80 குரங்கு காய்ச்சல் (Monkeypox) நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உலக சுகாதார நிறுவனம் (WHO) மேலும் 50 நோயாளிகளை அறிகுறிகளுடன் அடையாளம் கண்டுள்ளது மற்றும் நோய்த்தொற்றின் அறிகுறிகளுக்காக அவர்களை பரிசோதித்து வருகிறது.

ஒன்பது ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

குரங்கு காய்ச்சல் (Monkeypox) என்பது குரங்குகளினால் பரவும் தொற்று நோயாகும் மற்றும் இது ஒரு விலங்கியல் (zoonotic) நோயாகும்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, zoonotic என்பது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு ஒரு நபருக்கு பரவக்கூடிய ஒரு நோயாகும்.

காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, தோல் அரிப்பு போன்றவை குரங்கு காய்ச்சலின் (Monkeypox) அறிகுறிகளாகும்.

Related posts

பதுளை குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

வழக்கறிஞர் அங்கியை அணிந்து கொண்டு வழக்குகளை பிரதமர் விசாரிக்க வேண்டும் – தர்மரத்ன தேரர்.