உள்நாடு

அமைச்சர் பதவிகளை எடுப்பது கட்சியின் முடிவுக்கு எதிரானது

(UTV | கொழும்பு) – கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் புதிய அரசாங்க அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக முன்னாள் ஜனாதிபதியும் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமைச்சுப் பதவிகளைப் பெறுவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அமைச்சுப் பதவிகளை ஏற்க வேண்டிய அவசியமில்லை எனவும், அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க மத்திய குழு தீர்மானித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மக்கள் பட்டினியால் வாடுகின்றனர், நாட்டை மீளக் கட்டியெழுப்ப நாட்டை நெறிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

துருக்கி யுவதி மீது பாலியஸ் துஷ்பிரயோகம் – சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் உட்பட 8 பேர் கைது

வலுக்கும் ‘யாஸ்’