உள்நாடு

“அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதால் இராஜினாமாவுக்கு அவசியமில்லை”

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதால் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்றுவதற்கான தனது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும் என நம்புவதாக தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமின்மை இரண்டு வாரங்களுக்குள் தீர்க்கப்படாவிட்டால் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் முன்னர் தெரிவித்திருந்தார்.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலை முடித்து நிதியுதவி பெறுவதற்கு எடுக்கப்பட்ட நேரம் குறித்து தெளிவுபடுத்தினார்.

Related posts

சமூகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது

குறித்த சில வாகனங்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது!

ஜெய்சங்கர் – விஜித ஹேரத் சந்திப்பு

editor