உள்நாடு

மஹிந்த மீது சஜித் குற்றச்சாட்டு…

(UTV | கொழும்பு) –  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கடந்த 9ஆம் திகதி அலரிமாளிகையில் அமைதியான முறையில் பிரியாவிடை நிகழ்வு நடைபெறாமல் காட்டுமிராண்டித்தனம் பரவியமையே நாட்டில் அமைதியின்மைக்கு பிரதான காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்த நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை தேவை என தெரிவித்தார்.

இதேவேளை, புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட வேண்டுமாயின் கொள்கைகளை கூட கைவிடக் கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அனைத்து பல்கலைக்கழகங்களதும் மீள் ஆரம்பம் ஒத்திவைப்பு

ஆண்டின் முதலாவது சந்திரகிரகணம்

கடை உணவுகளுக்கு விலை அதிகரிப்பு