உள்நாடு

“அமைச்சுப் பதவிகளை ஏற்காது நாட்டைக் கட்டியெழுப்ப அரசுக்கு ஆதரவளிக்கிறோம்”

(UTV | கொழும்பு) – அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க சுயாதீன குழு தீர்மானித்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய சுயேட்சை கட்சிகளுடன் இன்று (மே 16) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் பிரதமரால் முன்மொழியப்பட்ட 15 குழுக்களுடன் இணைந்து, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உதவுவதாகவும் முன்னாள் அமைச்சர் கம்மன்பில தெரிவித்தார்.

“..எதிர்காலத்தில் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய தேசிய சபையொன்றை அமைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில் 15 குழுக்கள், 10 துறைக் குழுக்கள் மற்றும் 15 நிதிக் குழுக்களை அமைத்து, அமைச்சர்கள் அல்லாத அனைத்து அரசியல் கட்சிகளையும் தலைவர் பதவிகளை கைப்பற்றி நாட்டை ஆள்வதில் அனைவரையும் ஈடுபடுத்துமாறு அழைப்பு விடுக்க வேண்டும். நாங்கள் அமைச்சுப் பதவிகளுக்கு பேராசை கொண்டவர்கள் அல்ல நாட்டைக் கட்டியெழுப்ப விரும்புகின்றோம். எனவே, அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் நாட்டைக் கட்டியெழுப்பும் எமது முயற்சிகளுக்கு உண்மையாகவும் நியாயமாகவும் ஆதரவளிப்போம் என பிரதமரிடம் தெரிவித்தோம்..”

அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க சுயேட்சைக்குழு தீர்மானித்துள்ளதாகவும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை இணக்கம்!

கண்டியிலும், மாவனெல்லயிலும்இடம்பெறும் ஆசிரியர்களுக்கானஇலவச பயிற்சி பட்டறை

editor