(UTV | கொழும்பு) – வன்முறையாக நடந்துகொள்பவர்களுக்கு எதிராக அதிகபட்ச நடவடிக்கை எடுக்குமாறும், தேவையான போது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சட்டப்பூர்வமான பலத்தை பயன்படுத்துமாறும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கலவரக்காரர்கள் அல்லது வன்முறைக் கும்பல்களால் உயிரிழப்பையோ அல்லது கொள்ளையடிப்பதையோ தடுக்கவும், பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம், கொள்ளை அல்லது உயிர் சேதம் அல்லது கடுமையான காயங்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.