உள்நாடு

பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் பணிப்பு

(UTV | கொழும்பு) –  காலி முகத்திடல் போராட்ட மைதானத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அதற்கான காரணங்களை கண்டறிய உடனடியாக விசாரணை நடத்துமாறு காவல்துறைமா அதிபருக்கு எழுத்து மூலம் அவர்
அறிவித்துள்ளார்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கு பொறுப்பான தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்தப் பொறுப்புகளை புறக்கணிக்கக் கூடாது எனவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகைக்கு சென்ற குழுவொன்றின் வன்முறைச் நடவடிக்கை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைமா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு இன்று (10) பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

 நடாசாவை கைது செய்ய முடியுமென்றால் ஏன் ஞானசாரவை கைது செய்ய முடியாது? சந்திரிகா

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணைந்த புதிய விமானம்!

வர்த்த அமைச்சர் அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரிக்கை