உள்நாடு

நாளை காலை 7 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும்

(UTV | கொழும்பு) –  பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆம் சரத்தின் கீழ் நாடு முழுவதும் இன்றிரவு 7 மணிமுதல் நாளை (10) காலை 7 மணிவரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை விடுத்து இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துமூல அனுமதியின்றி பொது வீதிகள், தொடருந்து மார்க்கங்கள், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது வேறு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் இருப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக மறு அறிவித்தல் நாடு முழுவதும் காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

‘நனோ நைட்ரஜன்’ திரவ உரம் தாயகத்திற்கு

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றுக்கு

பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிட இந்தியா உதவுகிறது