உள்நாடு

கூட்டுறவு சேவை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இராஜினாமா

(UTV | கொழும்பு) – கூட்டுறவு சேவை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (06) இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சிரேஷ்ட பல்கலைக்கழக விரிவுரையாளரான இவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்.

Related posts

தபால் கட்டணமும் அதிகம்

மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவு

தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்