கிசு கிசு

எரிபொருள் விலை மீண்டும் உயரும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – கடந்த 18ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தைச் சந்திப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

விலைகள் அதிகரித்துள்ள போதிலும் டீசல் மற்றும் பெற்றோல் நட்டத்தில் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 313 ரூபாவாக இருந்தாலும், 87 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அவர் கூறினார்.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக நட்டம் அதிகரித்து வருவதாகவும், ஏப்ரல் 18ஆம் திகதி அதிகரிக்கப்படுவதற்கு முன்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நாளாந்த நட்டம் 1613 மில்லியன் ரூபாவாகும் எனவும் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

Related posts

முகக்கவசம் அணியாதோர் இறந்தவர்களுக்கு கல்லறை தோண்ட வேண்டும்

சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் சந்திரிகாவிற்கு எதிர்ப்பு

சமுதிதவுக்கு எதிரான தாக்குதலின் பின்னணியில் மர்மம் – விஜித