உள்நாடு

நாளைய ஹர்த்தாலுக்கு தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் முழு ஆதரவு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் நாளைய தினம் (06) முன்னெடுக்கப்படவுள்ள 24 மணித்தியால ஹர்த்தாலுக்கு அதிகாரிகள் பதிலளிக்கத் தவறினால், காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் ஹர்த்தாலை முன்னெடுக்க தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தீர்மானித்துள்ளது.

அன்றைய ஹர்த்தாலுக்கு செவிசாய்க்காவிடின், மே 11ஆம் திகதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் ஹர்த்தால் நடத்தப்படும் என்று நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

மக்கள் போராட்டம் ஒரு மாதத்தை நெருங்கியுள்ள நிலையில், நிலவும் நெருக்கடிக்கு சாதகமான பதிலையும் நாடு எதிர்நோக்கி வரும் அழிவுகளை தடுக்கவும் தவறிவியுள்ளதாக ஜனாதிபதிக்கு அவர் நினைவூட்டினார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு இடையூறு விளைவிப்பது மற்றும் அவர்களின் தனிப்பட்ட நலன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts

ராஜித உட்பட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல்

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்- மௌலவிக்கு தொடர் விளக்கமறியல்

ராஜபக்‌ஷர்களை நான் பாதுகாத்திருந்தால் அவர்கள் என்னை விட்டு ஓடியிருக்க மாட்டர்கள் – ஜனாதிபதி ரணில்

editor