உள்நாடு

சுகாதார சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களும் வேலைநிறுத்தத்திற்கு தயார்

(UTV | கொழும்பு) – வைத்தியர்கள் தவிர சுகாதார சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களும் இம்மாதம் 6ஆம் திகதி காலை 7 மணி முதல் 24 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் சேவைகள் அனைத்தும் தாமாக முன்வந்து வழங்கப்படுவதாகவும், மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைக்கும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், அன்றைய தினம் அத்தியாவசியமற்ற பொது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரவேண்டாம் என தொழிற்சங்கங்கள் பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றது.

காலை 9 மணி முதல் சுகாதார அமைச்சு மற்றும் வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

கோரிக்கைகளை வென்றெடுக்கும் நோக்கில் தமது சம்பள முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி இலங்கையில் உள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் சில மாதங்களுக்கு முன்னர் நீண்ட வேலைநிறுத்தம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன.

அதிலும் பொதுமக்கள் எப்படி கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை பார்க்க முடிந்தது.

தற்போதைய ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இம்முறை இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சமுர்த்தி வங்கிகளில் ஊழல் மோசடி – கணக்காய்வு அறிக்கையில் அம்பலம்.

இவ்வருடம் அரிசி இறக்குமதி இல்லை!

பொதுத்தேர்தல் – வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளை நிறைவு