உள்நாடு

‘சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை எதிர்கொண்ட மிகவும் சோகமான தொழிலாளர் தினம் இது’

(UTV | கொழும்பு) – சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை எதிர்கொண்ட மிகவும் மோசமான மற்றும் சோகமான நாள் இந்த தொழிலாளர் தினம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் இம்முறை மே தினத்தை கறுப்பு மே தினமாக கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் நாட்டு மக்களின் முழு நம்பிக்கையையும் அழித்த அரசாங்கம் வரலாற்றில் இருந்ததில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தின் கீழ் கொண்டாடப்படும் கடைசி மே தினமாக இவ்வருட தொழிலாளர் தினத்தை மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள தொழிலாளர் தினச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களுக்கும் அழைப்பு

ராஜித சேனாரத்ன கைது

புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் பாடசாலை விடுமுறை