(UTV | கொழும்பு) – சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் இன்று காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இன்று காலை ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட்ட 11 கட்சிகளின் தலைவர்களுடன் மாத்திரமே இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்துடன் இணைந்த அனைத்துக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான கலந்துரையாடல் இன்று காலை நடைபெறவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சில உடன்பாடுகளை எட்டுவது மற்றும் இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான முன்மொழிவுகளை பெறுவது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.