உள்நாடு

மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் வீதித்தடைகளை அகற்று

(UTV | கொழும்பு) –   மக்கள் அதிகாரம் என்ற சுனாமி பேரலையினால் அழிந்துள்ள அரசாங்கம், தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக மக்கள் மீதான அடக்குமுறைகளையும் அச்சுறுத்தலையும் மேற்கொண்டு வருகிறதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்;

இவற்றில் அண்மைச் சம்பவமாக, கொழும்பு கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள வீதிகளை மறிக்கும் வகையில் நிரந்தர வீதித் தடைகளை அமைத்துள்ளது. லோட்டஸ் வீதி முற்றாக மூடப்பட்டுள்ளமையினால் வாகனங்கள் கொழும்புக்குள் பிரவேசிப்பதற்கு வேறு பாதைகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் மக்கள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நாட்டில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களின் பல போராட்டப் பேரணிகள் வருகைத் தருவதற்கு எதிர்பார்த்திருந்தமையினால், அந்த அச்சத்தில் அரசாங்கம் இருப்பதுடன், இந்த கேலிக்கூத்தான வீதி தடைகள் மூலம் மக்கள் போராட்டங்களை தடுக்க முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.
இரண்டு வருடங்களாக இந்நாட்டில் பல்கலைக்கழக பிரிவுகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் அனைத்தும் தற்போதுவரை முடங்கிபோயுள்ளன.

இந்நாட்டின் பிரஜைகளின் அங்கத்தவர்களாகவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தமது உரிமைகளுக்காக போராட்டம் நடத்துவதற்கு இருக்கும் உரிமையை அரசாங்கமோ அல்லது வேறு எந்த சக்தியினாலும் மீற முடியாது.
சுமார், இரு வாரங்களுக்கு மேலாக ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் நான்கு சுவர்களுக்குள் அடைத்து வைத்து வைப்பதற்கு மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அரசாங்கம் தற்போது, பயங்கரவாத பாணியை பயன்படுத்தி நிரந்தர வீதி தடைகளை உருவாக்கி, தாங்கள் அடைக்கப்பட்டிருக்கும் வரையறையை சற்று விரிவாக்குவதற்கே தயாராகி வருகின்றன.

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்புகள் வெடித்துள்ள இவ்வேளையில், அந்த மக்களின் எதிர்ப்பை கட்டுப்படுவத்துவதற்கு அரசாங்கத்திடம் எந்தவொரு துருப்புச் சீட்டும் இல்லை என்பதுடன், நாட்டைக் கட்டியெழுப்புவது பற்றி அரசாங்கம் சிந்திக்கக் கூட வேண்டிய தேவையில்லை.

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, தமது சொந்த அதிகார நிகழ்ச்சி நிரலுக்காக தன்னிச்சையான ஆட்சியில் ஈடுபட்ட, கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக எழுந்துள்ள இந்த மக்கள் சக்தி, நிபந்தனையற்ற, நியாயமானவை என நாங்கள் நம்புக்கையுடன் கருதுகின்ற அதேவேளை, மக்களின் உரிமைகளுக்கு எதிரான அரசாங்கம் தொடக்கும் எந்தவொரு அடக்குமுறைக்கு எதிராக தயக்கமின்றி முன்நிற்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இருமுறை சிந்திக்காது என்பதையும் வலியுறுத்துகிறோம்.

எனவே, மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகள் மற்றும் உரிமைகளுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் இந்த தன்னிச்சையான நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்பதுடன், அரசாங்கத்தின் தலைவிதி,கடைசி விளிம்பில் இருக்கும் போது அல்லது இந்த முட்டாள்தனமான முடிவுகளின் மூலம் மக்கள் மீதான அழுத்தத்தை தீவிரப்படுத்த வேண்டாம் எனவும் நாங்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம்.

May be an image of text

Related posts

கொரோனா : மொத்தம் 212 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

UNP இனது அடுத்த சத்தியாக்கிரகப் போராட்டம் மாத்தறையில்

காதலனுடன் சென்று காணாமற்போன யுவதி – கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு.