உள்நாடு

“சுடச் சொன்னது யார் என்று இன்னும் சொல்லவில்லை”

(UTV | கொழும்பு) – 113ஐ அந்தப் பக்கமிருந்தோ, இந்தப் பக்கத்திலிருந்தோ காட்டினாலும் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது எனவும், நாட்டின் யதார்த்தத்தை அனைவரும் புரிந்துகொண்டு ஒன்றுபட்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிதியமைச்சரின் உரையின் பின்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்த முன்னாள் பிரதமர், சாலை வரைபடத்தை முன்வைக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் கூறியதை தானும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

“..ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சென்றுள்ளார். சுட்டுக் கொலை செய்ய உத்தரவிட்டது யார் என்று இதுவரை கூறவில்லை. பி அறிக்கை தயாரிக்கப்பட்டது. பி அறிக்கை பின்னர் நீக்கப்பட்டது. துப்பாக்கிச்சூட்டுக்கான காரணத்தை விளக்கியிருக்க வேண்டும்.அதை சொல்லவில்லை. அனைத்து ஒழுக்கங்களும் மீறப்பட்டன..”

Related posts

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தொடர்ந்தும் PCR பரிசோதனைகள்

பிள்ளையான் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ஓய்வூதியம் பெறுவோருக்கு இலவச பயணச் சீட்டு வழங்கும் நிகழ்வு ஆரம்பம் [PHOTO]